ஷோபா சக்தியின் (அன்ரனிதாசன் ஜேசுதாசன்) இச்சா – புத்தக விமர்சனம்
வெளியீட்டாளரின் பதிவு:
“தற்கொலை செய்துகொள்வதில், உலகிலேயே இலங்கைக்குத்தான்
நீண்டகாலமாக முதல் இடமிருக்கிறது. போருக்கு முன்பும் போரிலும் போருக்குப் பின்பும்
இந்த முதலிடத்திலிருந்து இலங்கை கீழிறங்கவேயில்லை. கூட்டுத் தற்கொலை செய்துகொள்ளும்
ஓர் சமூகத்தின் சுயசாட்சியமே இந்நாவல் என்று சுருக்கமாகச் சொல்லலாம்”
குறிப்பு: நான் இந்த நாவலை பிரெஞ்சில்
படித்தேன்
Afin de lire mon avis de lecture en français, cliquez ici
இச்சா என்பது இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ஷோபா சக்தி (அன்ரனிதாசன் ஜேசுதாசன்) எழுதிய நாவல். இது இலங்கைத் தீவின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆலா என்னும் இளம் பெண்ணைய பற்றிய கதை. இலங்கையின் கிழக்குப் பகுதி வரலாற்று ரீதியாக பெரும்பாலும் தமிழர்கள் வசிக்கும் பகுதியாக இருந்தாலும் கூட இலங்கை அரசாங்கத்தின் கொளகைகளுடன் தீவின் பெரும்பான்மை மக்களான சிங்களவர்களால் ஆதிக்கம் செலுத்தப் படுகிறது. அங்குள்ள சிங்களப் போராளிகளின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆலாவின் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட சோகத்திற்குப் பிறகு அவளுக்கு விடுதலைப் புலிகளைத் தவிர வேறு வழியில்லை. கதை. தற் ஆலாவுக்கு தளபதி சுல்தான் பாபாவுடனான காதல் கதை, மனித வெடிகுண்டாக ஆலாவின் பணி , இலங்கைச் சிறைகளில் அவளது அனுபவங்கள் மற்றும் இந்த வேதனையான சூழ்நிலையில் அவள் கொண்டிருந்த நட்பு போன்ற பல துணைக் கதைகள் உள்ளன. நாவலின் ஒரு பகுதியில் ஆலா ஐரோப்பாவின் ஒரு நாட்டில் குடி இருப்பார். இந்த நாடு ஸ்காண்டிநேவிய பகுதியில் எழுத்தாளரின் ஒரு கற்பனை நாடு. (அவர்கள் மொழி ஃபின்னிஷ் அல்லது
எஸ்டோனியன் போல இருந்தது).
நான் இந்த நாவலை மிகவும் ரசித்தேன். ஒரு
மனித வெடிகுண்டு தன் பணியை விட்டு விலகப் போன பிறகு அவர்கள் தங்களது இரண்டாவது வாழ்க்கையை
எப்படி நடத்துவார்கள் என்ற கேள்வி என்றும் என் மனதில் இருந்தது. ஆலாவின் இந்த மாற்றம்
எனக்கு மிகவும் ரசிக்கும்படி இருந்தது. கதை இலங்கைப் போர் சமயத்தில் நடக்கிறது
(2009 வரை)
ஆலா மிகவும் நன்றாக படைக்கப் பட்ட கதாபாத்திரம்.
அவளுக்கு அவள் குடும்பமும், குடும்பத்தினரும் மிகவும் முக்கியம். அவர்களுக்காக எதையும்
செய்யத் துணிந்தவள். அவளுக்கு குடும்பத்தினர் மேல் மிகவும் பாசம் அதிகம். ஆனால் கதையின்
முடிவு வரை அவள் தனது வாழ்க்கையில் முக்கியமானவர்களை இழந்து கொண்டே இருக்கிறார்.
ஐரோப்பாவில் நடக்கும் பகுதியைப் பற்றிக்
கூற வேண்டும் என்றால், எனக்கு தனிப்பட்ட முறையில் நிஜ உலகத்தில் நடக்கும் கதையில் ஒரு
கற்பனை நாட்டையோ , ஒரு கற்பனை மொழியையோ பயன்படுத்து வதில் பெரிய விருப்பம் கிடையாது.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இதில் சொல்லப் பட்டிருக்கும் பல காட்சிகள் இலங்கையில்
உண்மையில் நடந்த செய்திகள்(2000 த்தில்). ஆனால்
இந்த நாவல் என் விருப்பத்திற்கு ஒரு விதிவிலக்கு . ஏனென்றால் இறுதியில் எழுத்தாளர் இந்தக் கற்பனை நாட்டை மிகவும்
சிறப்பாகப் பயன் படுத்தி இருந்தார்.(எப்படி என்பதை சொன்னால் அது ஒரு spoiler ஆகி விடும்.)
இது ஒரு சுலபமாகப் படிக்கும் நாவல் அல்ல.
இதில் பல வன்முறைக் காட்சிகள் உள்ளன. ஆனால் உங்களால அதைத் தாங்க முடிந்தால் , படிப்பதற்கு
இது மிகவும் நல்ல நாவல் , இதைப் படித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று கூறி
என் விமரிசனத்தை முடிக்கிறேன்.
இந்த நாவலுக்கு என்னுடைய மதிப்பெண் பத்துக்கு
ஒன்பது.
மதிப்பெண்
- 9/10
நன்றி, வணக்கம்
அனிருத்
Commentaires
Enregistrer un commentaire